search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி நீர்பிடிப்பு பகுதி"

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    ஒகேனக்கல்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் மழை குறைவு காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த சில நாட்காளக நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

    கர்நாடக மாநிலத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்டராம்பாளையம் ஆகிய காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலை பெய்த பரவலான மழையால் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து 9 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

    மழை குறைந்ததால் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சற்று சரிந்து 7400 கனஅடியாக குறைந்தது. மீண்டும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் நேற்று ஒகேனக்கல்லுக்கு சற்று அதிகரித்து நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

    இதனால் மெயினருவி, சினிபால்ஸ், காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சுற்றுலா பயணிகள் மெயினருவி, சினிபால்ஸ் ஆகிய பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். கோத்திக்கல் பாறையில் இருந்து மணல் திட்டு வரை பரிசல் இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் கர்நாடகா- தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது.

    நேற்று நீர்வரத்து விநாடிக்கு 6,700 கனஅடியாக இருந்தது.

    தற்போது கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாலும், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று விநாடிக்கு 7,500 கனஅடியாக அதிகரித்தது.

    மெயின் அருவி அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி, காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.  #Hogenakkal #Cauvery
    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 10 நாளில் 5 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.

    சேலம்:

    தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை ஒகேனக்கலில் 3 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்தது. இதனால் அங்குள்ள மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

    இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று 2038 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 2594 கன அடியாக உயர்ந்தது.

    அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    கடந்த 27-ந் தேதி 34.28 கன அடியாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று 39.15 கன அடியாக உயர்ந்தது. இதனால் கடந்த 10 நாட்களில் மட்டும் 5 அடிக்கும் மேல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 500 கன அடியாக குறைந்துள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதனால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த 9-ந் தேதி மேட்டூர் அணைக்கு 1970 கனஅடி தண்ணீர் வந்தது.

    பின்னர் மழை குறைந்ததால் நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று 479 கன அடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து 603 கன அடியாக இருந்தது.

    அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக கடந்த சில நாட்களாக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விட்டதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது.

    இந்த நிலையில் தண்ணீர் திறப்பு நேற்றிரவு முதல் 500 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று 32.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 32.8 அடியாக சரிந்தது.

    விரைவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளதால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிந்துள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த 9-ந் தேதி 1970 கன அடியானது. பின்னர் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது.

    நேற்று 806 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 748 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 33.36 கன அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 33.19 அடியாக சரிந்தது.

    ×